TVK அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அவர்களை சந்தித்த பாபுஜி சுவாமிகள்!
கோவை தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களை விஸ்வகர்மா ஜெகத் குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, விஸ்வகர்மா காயத்ரி தேவி திருவுருவப் படத்தை பாபுஜி சுவாமிகள், புஸ்ஸி ஆனந்த் அவர்களிடம் வழங்கினார். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் விஸ்வகர்மா சமுதாய மக்களின் கோரிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக நலப்பணிகள் குறித்தும் பாபுஜி சுவாமிகள் விளக்கினார். குறிப்பாக, தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் மக்களுக்கு நிலவேம்புக் கஷாயம் வழங்கப்பட்டதாகவும், இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் அறக்கட்டளையின் மக்கள் நலப்பணிகள் குறித்த விவரங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
இந்த விவரங்களைப் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் கவனமாகக் கேட்டறிந்தார். மேலும், விஸ்வகர்மா சமுதாய மக்களின் கோரிக்கைகள் மற்றும் அறக்கட்டளையின் சமூகப் பணிகள் குறித்தும் சந்திப்பின்போது எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோவை மாவட்டப் பொறுப்பாளர் ஐஏஎஸ் மணி, மாநில நிர்வாகக் குழுத் தலைவர் வரதராஜன், சுந்தராபுரம் ஜெட்லி பிரகாஷ், கோவை குருசாமி, பல்லடம் ஜெகநாதன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் உடனிருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0