“UPI வரி வேண்டாம்!” கோவையில் வணிகர்கள் ஓங்கி ஒலித்த உரிமைக் குரல்!
கோவை, அக். 8 வியாபாரிகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவரும் புதிய ஆன்லைன் UPI பணப் பரிவர்த்தனைக்கு வரி விதிக்கும் முறையை கைவிடக் கோரி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பில் கோவையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் அண்ணாச்சி அ. முத்துகுமார் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், ஆன்லைன் UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டால், சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு வியாபாரிகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என வலியுறுத்தப்பட்டது. எனவே, வணிகர்களின் நலன் மற்றும் வணிகச் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, UPI பரிவர்த்தனைக்கு வரி விதிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், வணிகர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.
உடன் மண்டலத் தலைவர் ப. சுதர்சன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் மூலம் வணிகர்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0