டாக்டர் மணிகண்டனுக்கு உற்சாக வரவேற்பு

Oct 6, 2026 - 23:08
 0  4
டாக்டர் மணிகண்டனுக்கு உற்சாக வரவேற்பு

கோவை இந்திய இளைஞர்கள் மற்றும் இந்திய வளர்ச்சி குறித்து லண்டன் நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றி கௌரவ பட்டம் பெற்று, கோவை திரும்பிய டாக்டர் மணிகண்டனுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது 

லண்டன் யு.கே நாடாளுமன்றத்தில் இளைஞர் தலைமைத்துவம், சர்வதேச அரசியல் மற்றும் உலகளாவிய விவகாரங்களில் இளைஞர்களின் பங்களிப்பு குறித்து உரையாற்றுவதற்காக கோவையைச் சேர்ந்த டாக்டர் டி. மணிகண்டன் லண்டன் சென்றிருந்தார். யு.கே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவருக்கு, அவரது பேச்சு மற்றும் பங்களிப்பை பாராட்டும் வகையில் இன்டர்நேஷனல் யூத் டிப்ளமேக்கி ஸ்பீக்கர் என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷ், தெலங்கானா துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்கா ஆகியோரை சந்தித்து டாக்டர் டி. மணிகண்டன் வாழ்த்துகளை பெற்றார். பின்னர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய டாக்டர் டி. மணிகண்டன், கூறியதாவது.. “இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசியது பெருமையாக உள்ளது. இதனை அங்கீகரிக்கும் வகையில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் என்னை அழைத்து பாராட்டியுள்ளனர். பாரத பிரதமரின் இலக்கை நோக்கி இளைஞர்கள் பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இளைஞர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்” என்றார்.

மேலும், “மற்ற மாநில முதலமைச்சர்கள் என்னை அழைத்து பாராட்டியுள்ளனர். தமிழக முதலமைச்சரும் என்னை அழைத்து பேசி பாராட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம்” என அவர் தெரிவித்ததுடன், தமிழக அரசின் அழைப்புக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0