காந்தி, காமராஜர் நினைவாக அஸ்தி கலசத்துக்கு மலரஞ்சலி!

Oct 5, 2026 - 19:11
 0  2
காந்தி, காமராஜர் நினைவாக அஸ்தி கலசத்துக்கு மலரஞ்சலி!
காந்தி, காமராஜர் நினைவாக அஸ்தி கலசத்துக்கு மலரஞ்சலி!
காந்தி, காமராஜர் நினைவாக அஸ்தி கலசத்துக்கு மலரஞ்சலி!

காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி!

கோவை காமராஜ் மக்கள் இயக்கத்தின் சார்பில், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் ஜெயந்தி மற்றும் கர்மவீரர் காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை பேரூர் காஞ்சிமா நதிக்கரை சோழன் துறை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகாத்மா காந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, தலைவர்களின் நினைவாக வைக்கப்பட்டிருந்த அஸ்தி கலசத்திற்கும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் நினைவாகவும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

காமராஜ் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, தேசத் தலைவர்களின் கொள்கைகள், தியாகங்கள் மற்றும் மக்கள் சேவையை நினைவுகூர்ந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமராஜர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் பேரூர் நாகராஜ் செய்திருந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0