100 சதவிகித தேர்ச்சியை பெற்றுத்தந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு பாராட்டு
கோவையில் மாணவர்களின் வெற்றிக்காக பின்னால் இருந்து அயராது உழைத்த ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் வகையில், ஜூவல் ஒன் நிறுவனம் சார்பில் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கடந்த கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுத்தந்த ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பாக கவுரவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் கனவுகளுக்கு வழிகாட்டி, அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆசிரியர்களின் சேவையை கொண்டாடும் இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட கல்வி அலுவலர் கோமதி, மாநகராட்சி கல்வி அலுவலர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, 100 சதவிகித தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், மாணவர்களின் வெற்றிக்கு பின்னால் நின்று உழைத்த ஆசிரியர்களை கவுரவிப்பது சமூகத்தின் கடமை என்றும், ஆசிரியர்களின் சேவையை கொண்டாடும் வகையில் ஜூவல் ஒன் நிறுவனம் இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0