வில்லில் வேகம்… இலக்கில் துல்லியம்! தேசிய வில்வித்தையில் யுவபாரதி மாணவிகள் சாதனை!
கோவைமாவட்டம்
சிபிஎஸ்இ சார்பில் ஹரியானா மாநிலம் பானிபட்டில் செப்.21 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்ற 2026 தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டியில், கோயம்புத்தூர் யுவபாரதி பப்ளிக் பள்ளி மாணவிகள் சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளனர்.
19 வயதுக்குட்பட்ட இந்தியன் ரவுண்ட் பெண்கள் அணிப் பிரிவில், யுவபாரதி பள்ளி மாணவிகள் பிரகல்யா முத்துக்குமார், அஸ்விகா முத்துக்குமார், மைதிலி ராஜேஷ் ஆகியோர் இணைந்து தங்கப் பதக்கம் வென்றனர். மேலும், மைதிலி ராஜேஷ் தனிநபர் எலிமினேஷன் சுற்றில் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
அதேபோல், 14 வயதுக்குட்பட்ட ரிகர்வ் வில் பெண்கள் அணிப் பிரிவில், பிரகதி ஏகலைவன், ரீத்திகா ரகுநாத், அஞ்சனா ஸ்ரீ கோவிந்தராஜ் ஆகியோர் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.
மாணவிகளுக்கு சிறப்பான பயிற்சியும் வழிகாட்டுதலும் வழங்கிய பயிற்சியாளர் கிஷோர் குமார் ஆர். அவர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இவர்களின் வெற்றி கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
1
Sad
0
Wow
1