கல்லூரி வாழ்க்கையின் முதல் நாள்… வியக்கவைத்த நக்‌சத்திரா 2026 வரவேற்பு விழா!

Sep 22, 2026 - 17:15
 0  6
கல்லூரி வாழ்க்கையின் முதல் நாள்… வியக்கவைத்த நக்‌சத்திரா 2026 வரவேற்பு விழா!
கல்லூரி வாழ்க்கையின் முதல் நாள்… வியக்கவைத்த நக்‌சத்திரா 2026 வரவேற்பு விழா!

கோவை மாவட்டம் வேலந்தாவளம் சாலையில் உள்ள தனிஷ் அகமது இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில், முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில் ‘நக்‌சத்திரா 2026’ விழா நடைபெற்றது. இதில் ‘நிலா’ என்ற ஊடாடும் மனித உருவ ரோபோ காட்சிப்படுத்தப்பட்டதுடன், ட்ரோன்கள் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது மலர்கள் தூவப்பட்டன.

விழாவில் கல்லூரி இயக்குநர் டாக்டர் அருள் குழந்தைவேல் வரவேற்றார். நிர்வாக இயக்குநர் கே.ஏ. அக்பர் பாஷா தலைமை வகித்தார். தலைமை விருந்தினராக Hackup Technology Pvt. Ltd. நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி தினேஷ் பரந்தகன், சிறப்பு விருந்தினராக டாக்டர் ஜெயந்திஸ்ரீ பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.

டாக்டர் ஜெயந்திஸ்ரீ பாலகிருஷ்ணன் பேசுகையில், மாணவர்கள் கல்லூரி வாழ்க்கையைச் சிறப்பாகப் பயன்படுத்தி, நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். தெளிவான இலக்குகளை நிர்ணயித்து, நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

தினேஷ் பரந்தகன், செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையப் பாதுகாப்பின் எதிர்காலம் குறித்து எடுத்துரைத்தார். கல்லூரி தலைமைச் செயல் அதிகாரி ஏ. தமீஸ் அகமது வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் டாக்டர் ஜான் பாரூக் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவர் டாக்டர் ஜெ. சதீஷ் குமார் நன்றி கூறினார். மாணவர்கள் தங்கள் இலக்குகளைப் பலூன்களில் எழுதி வானில் பறக்கவிட்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0