“விஸ்வ பிரம்மரின் அருளால் ஒன்று திரண்ட விஸ்வகர்மா மக்கள்!”

Sep 18, 2026 - 00:28
 0  3
“விஸ்வ பிரம்மரின் அருளால் ஒன்று திரண்ட விஸ்வகர்மா மக்கள்!”
“விஸ்வ பிரம்மரின் அருளால் ஒன்று திரண்ட விஸ்வகர்மா மக்கள்!”
“விஸ்வ பிரம்மரின் அருளால் ஒன்று திரண்ட விஸ்வகர்மா மக்கள்!”
“விஸ்வ பிரம்மரின் அருளால் ஒன்று திரண்ட விஸ்வகர்மா மக்கள்!”
“விஸ்வ பிரம்மரின் அருளால் ஒன்று திரண்ட விஸ்வகர்மா மக்கள்!”

கோலாகலமாக நடைபெற்ற 13-ம் ஆண்டு ஸ்ரீ விஷ்வ பிரம்ம ஜெயந்தி விழா!

கோவை: தமிழ்நாடு விஸ்வகர்மா மக்கள் இயக்கம் சார்பில் 13-ம் ஆண்டு ஸ்ரீ விஷ்வ பிரம்ம ஜெயந்தி விழா மற்றும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக விழா கோவை சொக்கம்புதூர் பகுதியில் உள்ள சூர்யா பேக்கரி அருகே சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ நாக தேவதை அம்மன் குருபீடத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு விஸ்வகர்ம ஜகத்குரு பீடாதிபதி T.K. சக்கரவர்த்தி ஆச்சாரியார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ரஞ்சித் மேஸ்திரி முன்னிலை வகித்தார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே. அர்ஜுனன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீ நாக தேவதை அம்மன் குருபீடம் உலக மக்கள் அறக்கட்டளையின் மாநில செயலாளர் மருது, மாநில பொருளாளர் ஹரிகிருஷ்ணன், மாநில துணைச் செயலாளர் சக்திவேல், மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், சிவசேனா மாவட்ட பொதுச் செயலாளர் அயோத்தி ரவி, கோவை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கத் தலைவர் சுனில், கோவை மாவட்ட சிவகார்த்திகேயன் ரசிகர் நற்பணி இயக்கத் தலைவர் வினோத்குமார் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

தொடர்ந்து, தமிழ்நாடு விஸ்வகர்மா மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் அய்யனார், முருகேசன், பாண்டியராஜன், சுனிதாதேவி, அஜித்குமார், சுரேஷ்குமார், நந்தினி உள்ளிட்ட நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

விழாவில் விஸ்வகர்மா சமூகத்தின் பாரம்பரியம், கலை, தொழில் மற்றும் பண்பாட்டு பெருமைகளை போற்றும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சமூகத்தின் ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் எதிர்கால தலைமுறையினரின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

விழாவில் ஊர் பொதுமக்கள், இயக்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விஸ்வகர்மா சமூகத்தினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்ரீ விஷ்வ பிரம்மரை வழிபட்டு விழாவை சிறப்பித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0