நீலாம்பூரில் மீண்டும் அரசு பேருந்து சேவை.!
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நீலாம்பூர் பகுதியில், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, செரையாம்பாளையம்–அம்பேத்கர் நகர் இடையே இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து எண் 39 சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த இந்த பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால், நீலாம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பயனடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் தங்களது அன்றாட பயணத் தேவைகளுக்கு இந்த பேருந்து சேவை உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தொடங்கப்பட்ட அரசு பேருந்து சேவையை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்து, சிறிது தூரம் பேருந்தில் பயணம் செய்தார்.
அப்போது பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் அவர்களின் தேவைகள், போக்குவரத்து தொடர்பான சிரமங்கள் மற்றும் குறைகள் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி சந்தோஷ் கூறுகையில், “மக்களின் குறைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்கள் தொகையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தங்களது அன்றாட போக்குவரத்து தேவைக்கு இந்த சேவை பயனுள்ளதாக அமையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி, வெள்ளானைப்பட்டி ஊராட்சி செயலாளர் கண்ணன் (எ) தேவராஜ், செரையாம்பாளையம் கிளை செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0