மூட்டு மாற்று சிகிச்சையில் ராயல் கேர் மருத்துவமனை புதிய புரட்சி

Sep 13, 2026 - 12:15
 0  2
மூட்டு மாற்று சிகிச்சையில் ராயல் கேர் மருத்துவமனை புதிய  புரட்சி
மூட்டு மாற்று சிகிச்சையில் ராயல் கேர் மருத்துவமனை புதிய  புரட்சி
மூட்டு மாற்று சிகிச்சையில் ராயல் கேர் மருத்துவமனை புதிய  புரட்சி

 ராயல் கேர் மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதன்முறையாக நவீன ரோபோ தொழில்நுட்பம் அறிமுகம்!

மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் 4-ம் தலைமுறை ‘ஸ்ட்ரைக்கர் மாகோ 4 ஸ்மார்ட் ரோபோடிக்ஸ்’ பயன்பாடு

கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான நான்காம் தலைமுறை ‘ஸ்ட்ரைக்கர் மாகோ 4 ஸ்மார்ட் ரோபோடிக்ஸ்’ நவீன தொழில்நுட்பம் இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கான அறிமுக விழா கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. ராயல் கேர் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டு புதிய ரோபோ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலம், நோயாளிகளின் உடலமைப்புக்கு ஏற்ப அறுவை சிகிச்சையை தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு, அதிக துல்லியத்துடன் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது. பகுதி மற்றும் முழு முழங்கால், இடுப்பு, தோள்பட்டை உள்ளிட்ட பல்வேறு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், மருத்துவத் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் தமிழகம் இந்திய அளவில் முன்னணி மாநிலமாக இருப்பது பெருமைக்குரியது என்றார். தனியார் மருத்துவமனைகளில் அறிமுகமாகும் இதுபோன்ற நவீன தொழில்நுட்பங்களின் பயன்கள் பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளிலும் நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

ராயல் கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரன், நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்கும் நோக்கில் தொடர்ந்து நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருவதாக கூறினார்.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் நடேசன், நோயாளியின் உடலமைப்புக்கு ஏற்ப அறுவை சிகிச்சையை திட்டமிடவும், சிக்கலான மறுமூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளையும் அதிக துல்லியத்துடன் மேற்கொள்ளவும் இந்த ரோபோ தொழில்நுட்பம் உதவும் என தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0