பெற்றோர் கனவுக்கு புதிய நம்பிக்கை! நவீன KREATE IVF மருத்துவ மையம் தொடக்கம்!

Nov 17, 2026 - 12:30
 0  8
பெற்றோர் கனவுக்கு புதிய நம்பிக்கை! நவீன KREATE IVF மருத்துவ மையம் தொடக்கம்!

கோவை அவினாசி சாலையில் நவீன மருத்துவத் தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ‘கிரியேட் ஐவிஎஃப்’ கருத்தரிப்பு மற்றும் மகளிர் நலன் மருத்துவ மையம் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் மற்றும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை மருத்துவ மையத்தைத் திறந்து வைத்தார்.

மையத்தின் நிர்வாக இயக்குநரும், கருத்தரிப்பு மருத்துவ நிபுணருமான மருத்துவர் ஜனனி ரமனேஷ்  பேசுகையில், குழந்தையின்மை பிரச்சினைகளுக்கான நவீன மருத்துவப் பரிசோதனைகள், செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகள் மற்றும் மகளிர் நலன் சார்ந்த சிகிச்சைகள் இங்கு வழங்கப்படும் என்றார்.

மேலும், ஒவ்வொரு தம்பதியரின் உடல்நிலைக்கு ஏற்ப தனிப்பட்ட சிகிச்சைத் திட்டங்கள் மற்றும் அக்கறையான மருத்துவச் சேவைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மருத்துவமனை நிர்வாகி ரமனேஷ் வரதன் மருத்துவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0