சொந்தமாக கார் வாங்க ஆசையா? கோவையில் ஸ்ரீ சாய் கார்ஸ் வழங்கும் தீபாவளி ஸ்பெஷல்!
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் கார்ஸ் நிறுவனத்தின் ஆண்டு விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பிரம்மாண்டமான யூஸ்டு கார் விற்பனை மேளா தொடங்கியுள்ளது.
அக்டோபர் 10-ம் தேதி தொடங்கி, 19-ம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறும் இந்த விற்பனை மேளாவில், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சிறிய ரக கார்கள் முதல் உயர்தர கார்கள் வரை, 50 ஆயிரம் ரூபாய் முதல் பல்வேறு விலை வரம்புகளில் கார்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனால், தங்களது தேவைக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ற கார்களைப் பார்வையிட்டு தேர்வு செய்யும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்துள்ளது.
மேலும், பழைய காரை மாற்றிக்கொள்ளும் வசதி, தங்களது காரை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தும் ‘பார்க் அண்ட் செல்’ வசதி, வாகன ஆவணங்களைச் சரிபார்த்தல் மற்றும் வங்கிக் கடன் பெறுவதற்கான உதவி உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக, தமிழகம் முழுவதும் இலவசமாக உரிமையாளர் பெயர் மாற்றம் செய்து தரப்படும் என நிறுவனத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீ சாய் கார்ஸ் நிறுவனத்தின் ஆண்டு விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்காக ஏராளமான சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 19-ம் தேதி வரை நடைபெறும் இந்த விற்பனை மேளா குறித்த கூடுதல் விவரங்களுக்கு, 7092920021 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
தீபாவளி பண்டிகைக்கு உங்களுக்குப் பிடித்த காரைத் தேர்வு செய்ய, கோவை ஸ்ரீ சாய் கார்ஸ் யூஸ்டு கார் விற்பனை மேளாவை நேரில் பார்வையிடுங்கள்!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0