3 நாட்கள் நடைபெறும் "ரிவா" கண்காட்சி
கோவையில், தனிஷ்க் நிறுவனத்தின் ‘ரிவா’ திருமண நகைக் கண்காட்சி கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
ரேஸ்கோஸ் தாஜ் விவாந்தா நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் இந்தக் கண்காட்சி, அக்டோபர் 10 முதல் 12-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
ஐந்தாயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில், மணப்பெண்களைக் கவரும் வகையில் பாரம்பரிய மற்றும் நவீன வடிவமைப்பிலான ஏராளமான நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தங்க நகைகள், குந்தன், போல்கி, நவரத்தினம் மற்றும் வைர நகைகள் எனப் பல்வேறு வகையான ஆபரணங்கள் இடம்பெற்றுள்ளன. கோயில் வடிவமைப்புகள், மலர்கள், மயில் உருவங்கள் மற்றும் நுணுக்கமான கைவினை வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட நகைகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
திருமணத்தின் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்ற கழுத்தணிகள், அடுக்கு ஆரங்கள், வளையல்கள் உள்ளிட்ட பாரம்பரிய அணிகலன்களுடன் நவீன வடிவமைப்பு நகைகளையும் ஒரே இடத்தில் பார்வையிட்டு தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனிஷ்க் நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டார வணிக மேலாளர் டி. சந்திரசேகர் மற்றும் நகைத் தயாரிப்புப் பிரிவைச் சேர்ந்த சந்தோஷ் ஈ.ஏ.எஸ். ஆகியோர் கூறுகையில், தமிழர்களின் திருமண மரபுகளையும் இன்றைய மணப்பெண்களின் நவீன ரசனைகளையும் இணைக்கும் வகையில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும், வாடிக்கையாளர்களுக்குப் பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டம் உள்ளிட்ட சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் முதல் முறையாக நடத்தப்படும் இந்தத் திருமண நகைக் கண்காட்சி, கோவை வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான திருமண நகைகளை ஒரே இடத்தில் தேர்வு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
2