மனவளக் கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு விழா

Sep 3, 2026 - 21:07
 0  5
மனவளக் கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு விழா
மனவளக் கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு விழா

வேதாத்திரி மகரிஷியால் தோற்றுவிக்கப்பட்ட உலக சமுதாய 5 சேவா சங்கத்தின் சார்பில் பெண்களின் பெருமையை போற் றும் வகையில் ஆண்டுதோறும் மனைவி நல வேட்பு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மனவளக் கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு விழா ஈரோடு சம்பத் நகர் சாலையில் உள்ள கொங்கு கலை அரங்கத்தில்  நடைபெற்றது.

 விழாவில் அறக்கட்டளை அறங்காவலர் பிரேமாவதி வரவேற்று பேசினார். அறங்காவலர் சி.சரஸ்வதிதியானத்தை தொடங்கி வைத்தார். மனைவி நல வேட்பு குறித்து முதுநிலை பேராசிரியர் கே.பெருமாள் பேசினார். அதைத்தொடர்ந்து மனைவியை கவுரவிக்கும் விதமாக கணவர்கள் தங்களது மனைவிக்கு மலர் கொடுத்தும், மனைவி தங்களது கணவருக்கு கனி (ஆப்பிள் பழம்) கொடுத்தும் அன்பை பரிமாறி கொண் டனர்.

பின்னர் ராஜபாளையம் உமாசங்கர் சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டு, 'இல்லாள் எனும் நல்லாள்' என்ற தலைப்பில் பேசினார். விழாவில் 300-க்கும் மேற்பட்ட தம்ப |திகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆழியார் அறிவுத்திருக் கோவில் அறங்காவலர் வி.ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1