சிறப்பு கண்புரை சிகிச்சை முகாம்!

Oct 9, 2026 - 14:12
 0  3
சிறப்பு கண்புரை சிகிச்சை முகாம்!

கோவை கவுண்டம்பாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழாவை ஒட்டி கோவை மாவட்ட பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் சிறப்பு கண்புரை சிகிச்சை முகாம் நடைபெற்றது பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் இன்று தனது 58வது அகவையில் அடையெடுத்து வைக்கிறார். அவரது பிறந்த நாளை பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் பெரு விழாவாக கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தாளை முன்னிட்டு கோவை மாவட்ட பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் கோவை பாமக மாவட்ட மாநகர் மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தலைமையில் கவுண்டம்பாளையம் பகுதியில் சிறப்பு கண்புரை சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் காவல் ஆய்வாளர் கந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார். இதில் 40 வயதிற்கு மேற்பட்டோர் பொதுமக்கள் கலந்துகொண்டு கண் மற்றும் கண்புரை தொடர்பான சிகிச்சை எடுத்துக்கொண்டனர். 

இதில் கோவை பாமக வின் மாநகர் மாவட்ட செயலாளர் கோவை ராஜ், பாமக மாநில துணைத்தலைவர் தங்கவேல் பாண்டியன், நிழல் சேரிட்டபிள் டிரஸ்ட் Lion சுதாராஜ், கவுண்டம்பாளையம் காவல் ஆய்வாளர் கந்தசாமி, சீனிவாசநகர் நலச்சங்கத்தின் தலைவர் அருணாச்சலம், சிவசேனா கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முருகன், 18-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஐ பவுண்டேசன் மருத்துவர்கள், செவிலியர்கள், பாமக நிர்வாகிகள் கண்ணன், கோபிநாத், முத்துக்குமார், சீனிவாசன், விடியல் ஜெகன்னாதன், சிங்கை ரவிச்சந்திரன், மார்ட்டின் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0