நவராத்திரி முதல் தீபாவளி வரை… கோவையில் யூஸ்டு கார் விற்பனைத் திருவிழா!
கோவையில், CARS327 நிறுவனம் சார்பில் நவராத்திரி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 2-வது யூஸ்டு கார் விற்பனை மாநாடு தொடங்கியது. எல் அண்ட் டி பைபாஸ் சாலையில், பட்டணம் அருகே உள்ள CARS327 வளாகத்தில் அக்டோபர் 9 முதல் 18-ம் தேதி வரை மாநாடு நடைபெறுகிறது.
காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த விற்பனை மாநாட்டில், 500-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனைக்கு இடம்பெற்றுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ற கார்களைத் தேர்வு செய்யும் வகையில் பல்வேறு மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.கார் வாங்குவோருக்கு சிறப்புப் பரிசுகள், உறுதியளிக்கப்பட்ட பரிசுகள் மற்றும் சர்வீஸ் சலுகைகளும் வழங்கப்பட்டன.
இதுகுறித்து CARS327 நிறுவனத்தின் நிறுவனர் விஷ்ணு வேணுகோபால் கூறுகையில், குடும்பத்துடன் வந்து கார்களின் விலை மற்றும் வசதிகளை ஒப்பிட்டு, தங்களுக்கு ஏற்ற காரைத் தேர்வு செய்ய இந்த மாநாடு வாய்ப்பாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு 86819 66699, 89404 66699, 84287 66699, 89407 66699 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0