100 படுக்கைகள்… நவீன இருதய சிகிச்சை! கோவையில் அவேரா மருத்துவமனை திறப்பு!

Oct 4, 2026 - 16:51
 0  3
100 படுக்கைகள்… நவீன இருதய சிகிச்சை! கோவையில் அவேரா மருத்துவமனை திறப்பு!
100 படுக்கைகள்… நவீன இருதய சிகிச்சை! கோவையில் அவேரா மருத்துவமனை திறப்பு!

கோவை, அக்.5: கோயம்புத்தூரில் முழுமையான இருதய மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அவேரா இருதய மருத்துவமனை திறப்பு விழா, துடியலூர் ஸ்ரீ லட்சுமி நாராயண் மஹாலில் நடைபெற்றது.

 முழுமையான இருதய பராமரிப்புக்கான பிரத்யேக மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற டாக்டர் ராஜிபால் கே. அயைச்சந்தி மற்றும் டாக்டர் சந்திரசேகர் பத்மநாபன் ஆகியோரின் 30 ஆண்டுகால கனவின் நிறைவேற்றமாக இம்மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

விழாவில் பன்னாரி அம்மன் குழுமத் தலைவர் எஸ்.வி. பாலசுப்பிரமணியம் மருத்துவமனையை திறந்து வைத்தார். சங்கரா கண் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ஆர்.வி. ரமணி, பிரிகோல் நிறுவனர் விஜய் மோகள், வி.எல்.பி. அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மலர்விழி, பின்னணிப் பாடகி சுஜாதா மோகன், மேயோ கிளினிக் கௌரவப் பேராசிரியர் டாக்டர் சந்திரசேகரன் கே. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

100 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனையில் 2 நவீன கேத் லேப்கள், 2 மாடுலர் அறுவை சிகிச்சை அரங்குகள், 18 படுக்கைகள் கொண்ட இருதய தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் 16 படுக்கைகள் கொண்ட அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன.

இருதயவியல், இருதய-மார்பக அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை, அவசர மருத்துவம், நுரையீரல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிகிச்சை வழங்கப்பட உள்ளது. மேலும், நரம்பியல், சிறுநீரகவியல், நாளமில்லாச் சுரப்பியல் உள்ளிட்ட சிறப்புத் துறைகளும் செயல்பட உள்ளன. 24 மணி நேர மருந்தகம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளும் வழங்கப்படுகின்றன.

டாக்டர் ராஜிபால் கே. அயைச்சந்தி 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சைகளில் அனுபவம் பெற்றவர். டாக்டர் சந்திரசேகர் பத்மநாபன் 34 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0