ஆனைகட்டியில் வாரச்சந்தை திறப்பு!

Sep 6, 2026 - 17:35
 0  7
ஆனைகட்டியில் வாரச்சந்தை திறப்பு!
ஆனைகட்டியில் வாரச்சந்தை திறப்பு!
ஆனைகட்டியில் வாரச்சந்தை திறப்பு!

கோவை ஆனைகட்டி பகுதி மலைவாழ் மக்கள் மற்றும் பொதுமக்களின் 10 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய வாரச்சந்தை திறக்கப்பட்டது.

மலைவாழ் மக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்து, வருமானத்தை பெருக்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த வாரச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இடம் வாடகைக்கு எடுக்கப்பட்டு, சந்தை தொடர்ந்து செயல்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த முயற்சியில் ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார் முக்கிய பங்காற்றினார். வாரச்சந்தையை சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் திறந்து வைத்து, பொதுமக்கள் மற்றும் மலைவாழ் மக்களிடம் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அப்போது பேசிய அவர், ஆனைகட்டி பகுதி மக்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மலைவாழ் மக்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய இந்த சந்தை தொடர்ந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

புதிய வாரச்சந்தை மூலம் ஆனைகட்டி மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதி மக்களுக்கு புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0