சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் புகழ் அஞ்சலி

Oct 4, 2026 - 00:42
 0  4
சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் புகழ் அஞ்சலி

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய தலைமை சிவாஜி மன்றத்தின் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்தில் அண்ணல் மகாத்மா காந்தி ஜெயந்தி, கலை தெய்வம் சிவாஜி கணேசன் ஜெயந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் என முப்பெரும் ஆளுமைகள் புகழ் அஞ்சலி விழா நடைபெற்றது.  

 மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாள் மற்றும் கர்ம வீரர் காமராஜரின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அக்டோபர் 1ம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய தலைமை சிவாஜி மன்றத்தின் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்தில் அண்ணல் மகாத்மா காந்தி ஜெயந்தி, கலை தெய்வம் சிவாஜி கணேசன் ஜெயந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் என முப்பெரும் ஆளுமைகள் புகழ் அஞ்சலி விழா நடைபெற்றது.  

ஒன்றிய பொறுப்பாளர் ஆர் சிவாஜி ரவி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஒன்றிய தலைவர் கே மாணிக்கம் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொதுசெயலாளர் டி செல்வராஜ் வரவேற்புரை வழங்கினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சித் தலைவர் அ.அறிவரசு கலந்து கொண்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியடிகள், சிவாஜி கணேசன் மற்றும் காமராஜர் ஆகியோரது திரு உருவப்படங்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செய்து அவர்களது புகழஞ்சலி செலுத்தினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கொங்கு மண்டல சிவாஜி பாசறை பொறுப்பாளர் சிவசக்தி அடிகளார் கலந்து கொண்டார். மேலும் நகராட்சி கவுன்சிலர்கள் பொன் மாடசாமி, பேங்க் முருகேசன் மற்றும் அப்பாதுரை செந்தில் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

முப்பெரும் விழாவினை ஒருங்கிணைப்பு குழு ஒன்றிய தலைமை சிவாஜி மன்ற நிர்வாகிகளான பொருளாளர் பி பக்தகுமார், துணைத்தலைவர்கள் ஜெகநாதன், பி நடராஜன், உதவி செயலாளர்கள் ஞானசேகரன், கோவை சிவாஜி ரவி, கெளரவ ஆலோசகர்கள், அ ரவிந்திரன், சாரங்க நகர் பழனிசாமி உள்பட பலர் செய்திருந்தனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1