அன்பு உள்ளங்கள் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்

Oct 4, 2026 - 00:31
 0  1
அன்பு உள்ளங்கள் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்
அன்பு உள்ளங்கள் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்

கோவை மாவட்டம் பேரூரில் உள்ள அருந்ததியர் சமூக மடத்தில், அன்பு உள்ளங்கள் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு அன்பு உள்ளங்கள் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் பிரகாஷ் ரங்கசாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையர் எஸ்.செல்வகுமார் மத்திய கலால் துறை உதவி ஆணையர் ஏ.ஆர்.ஆர் அறவாழி ஐ.ஆர்.எஸ் ஆகியோர் கலந்து கொண்டார் உதவி ஆணையர் ஏ.ஆர்.ஆர் அறவாழி தூய்மை பாரதம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுக்க செய்தார் 

கோவை கிருஷ்ணா நர்சிங் ஹோம் மனநல மருத்துவர் டாக்டர் பி. ரவி சங்கர், ஊழல் தடுப்பு அமைப்பின் விக்ரம்சிங் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கி விழிப்புணர்வு உரையாற்றினர்.

முகாமில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, ஏழை எளியோருக்கான மருத்துவ உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மிதிவண்டிகள், அவர்கள் சுயமாகத் தொழில் தொடங்குவதற்கான உபகரணங்கள் மற்றும் அரசு சார்ந்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் கௌரவ ஆலோசகர்கள் மகேஸ்வரி, ஸ்டாலின், ராதாகிருஷ்ணன், லதா, முனிராஜ், செல்வராணி, லில்லி மார்கிரேட், பவித்ரா மற்றும் நிர்வாகிகள் கௌரிசங்கர், செந்தில்குமார், ரஞ்சிதம், விஜயலட்சுமி, ஷகிலாபானு, நிர்மலா தேவி, விஜயலட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதில் திரளான பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0