காந்தி ஜெயந்தியையொட்டி சாய்பாபா காலனியில் ரோட்டரி சார்பில் தூய்மைப் பணி

Oct 4, 2026 - 00:22
Oct 4, 2026 - 00:24
 0  2
காந்தி ஜெயந்தியையொட்டி சாய்பாபா காலனியில் ரோட்டரி சார்பில் தூய்மைப் பணி
காந்தி ஜெயந்தியையொட்டி சாய்பாபா காலனியில் ரோட்டரி சார்பில் தூய்மைப் பணி
காந்தி ஜெயந்தியையொட்டி சாய்பாபா காலனியில் ரோட்டரி சார்பில் தூய்மைப் பணி
காந்தி ஜெயந்தியையொட்டி சாய்பாபா காலனியில் ரோட்டரி சார்பில் தூய்மைப் பணி

கோவை  காந்தி ஜெயந்தியை யொட்டி, ரோட்டரி மாவட்டம் 3206 சார்பில் கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தூய்மைப் பணி நடைபெற்றது அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தில் தொடங்கிய இப்பணி, பாரதி பார்க் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் வரை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஐ.ஏ.எஸ்., ரோட்டரி மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் ஆர்.எஸ். மாருதி, அவினாசிலிங்கம் கல்வி நிறுவன துணைவேந்தர் முனைவர் வி. பாரதி ஹரிசங்கர் ஆகியோர் பணியை தொடங்கி வைத்தனர்.

இதில் ரோட்டரி நிர்வாகிகள், பல்வேறு ரோட்டரி சங்கங்களின் நிர்வாகிகள், ரோட்டராக்டர்கள், மாணவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், கோயம்புத்தூர் யூனிகார்ன்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பிலான மின்கழிவு சேகரிப்பு வாகனம் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜாவிடம் வழங்கப்பட்டது. கழிவுகளை தரம் பிரித்து சேகரிக்க 4 குப்பைத் தொட்டிகளும் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டன.

தூய்மையான கோவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0