சிவ சேனா நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா
கோவை சிவசேனா கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அட்சயா அரங்கில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, சிவசேனா கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மா.முருகன் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் நாகராஜன், மாநில அமைப்புச் செயலாளர் செந்தில், கோவை மண்டலத் தலைவர் ஹரிஹரன், காம்கர் சேனா மாரி செல்வம், கோவை மாவட்டத் துணைத் தலைவர்கள் தங்கராஜ், கிருஷ்ணன், மாவட்டத் தலைவர் மருது, மாவட்டச் செயலாளர் புகழரசன், துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
சிவசேனா சார்பில் நடைபெற்ற 5-ம் நாள் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களை பாராட்டி, அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள், பக்தர்களுக்கான சேவைகள், ஊர்வலப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த விழா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, கட்சியின் அமைப்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், சிவசேனா நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.
புதிய பொறுப்புகளை பெற்ற நிர்வாகிகளுக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் மா. முருகன் வாழ்த்துகளை தெரிவித்தார்.
விழாவில் சிவசேனா கட்சி நிர்வாகிகள், மாவட்ட மற்றும் பகுதி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0