சத்தியமங்கலம் நகராட்சியில் 100% வரி வசூல்!

Oct 1, 2026 - 18:52
 0  2
சத்தியமங்கலம் நகராட்சியில் 100% வரி வசூல்!

சத்தியமங்கலம், அக்.1:

சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை வசூலிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக நகராட்சி பணியாளர்களுக்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டு, அதன்படி வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வருவாய் உதவியாளர்கள் கணேஷ், குமார் ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் 2026–27 நிதியாண்டிற்கான முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டு வரிகளை முழுமையாக வசூலித்து சாதனை படைத்துள்ளனர்.

குறிப்பாக, முதல் அரையாண்டிலேயே முழுமையாக வரி வசூல் செய்த இருவரையும் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம் நகர்மன்றத் தலைவர் ஜானகி ராமசாமி, நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் வருவாய் உதவியாளர்கள் கணேஷ் மற்றும் குமாருக்கு பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1