வார்டு சபா கூட்டம் – பொதுமக்கள் குறைகள் குறித்து ஆலோசனை

Oct 1, 2026 - 09:21
 0  3
வார்டு சபா கூட்டம் – பொதுமக்கள் குறைகள் குறித்து ஆலோசனை
வார்டு சபா கூட்டம் – பொதுமக்கள் குறைகள் குறித்து ஆலோசனை
வார்டு சபா கூட்டம் – பொதுமக்கள் குறைகள் குறித்து ஆலோசனை
வார்டு சபா கூட்டம் – பொதுமக்கள் குறைகள் குறித்து ஆலோசனை

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண் 80-க்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் வார்டு சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாமன்ற உறுப்பினரும், பொது சுகாதாரக்குழு தலைவருமான பெ.மாரிசெல்வன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், தங்கள் பகுதியில் நிலவும் பல்வேறு குறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். இந்த மனுக்கள், மாமன்ற உறுப்பினர் பெ.மாரிசெல்வன் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர் கணேசன் முன்னிலையில் பெறப்பட்டன.

பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய கவனம் செலுத்தி, நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், அசோக் நகர் பகுதியில் குப்பைகளை ஈரக்கழிவு, உலர் கழிவு, சுகாதாரக் கழிவு, சிறப்புக் கழிவு என நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்து மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதையொட்டி, குப்பை தரம் பிரித்தல் தொடர்பான விழிப்புணர்வு கோலங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிறப்பாக கோலம் அமைத்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையர் கணேசன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர், மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0