வாடிக்கையாளர்களுக்காக பிரமாண்ட இசை நிகழ்ச்சி – ஜூவல் ஒன் ஏற்பாடு

Sep 29, 2026 - 20:22
 0  2
வாடிக்கையாளர்களுக்காக பிரமாண்ட இசை நிகழ்ச்சி – ஜூவல் ஒன் ஏற்பாடு
வாடிக்கையாளர்களுக்காக பிரமாண்ட இசை நிகழ்ச்சி – ஜூவல் ஒன் ஏற்பாடு
வாடிக்கையாளர்களுக்காக பிரமாண்ட இசை நிகழ்ச்சி – ஜூவல் ஒன் ஏற்பாடு

கோவை மாவட்டம் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அனைத்து தரப்பு மக்களும் தங்க நகைகள் வாங்கும் வகையில் 9, 14 மற்றும் 18 காரட் தரங்களில் நகைகளை ஜூவல் ஒன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஜூவல் ஒன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஈச்சனாரி ரத்தினம் அரங்கில் பிரமாண்ட “இசை இரவு” நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சுமார் 5 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். தனியார் தொலைக்காட்சி புகழ் ஸ்ரீதர்ஷனா, ஸ்ரீநிஷா, பிரியங்கா, பரத், லைனெட் உள்ளிட்டோர் பங்கேற்று பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியின் போது குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

இதுகுறித்து எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் கூறுகையில், கடந்த 12 ஆண்டுகளாக நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், கோவை கிராஸ்கட் சாலையில் 5 தளங்களுடன் பிரமாண்ட பிளாக்ஷிப் ஸ்டோர் தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு வகையான நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு 18 காரட் மட்டுமின்றி 9 மற்றும் 14 காரட் தரங்களிலும் நகைகள் விற்பனைக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0