“100 வகை டீ… ஒரே இடத்தில்! கோவையில் டர்மோனாவின் ‘ப்ளூ ராபின் டீ லவுஞ்ச்’ தொடக்கம்!”
நீலகிரி தேயிலையின் மணமும், நவீன டீ அனுபவமும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், கோவையில் டர்மோனா டீ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் தொடங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நான்கு தலைமுறைகளாக தேயிலைத் துறையில் செயல்பட்டு வரும் டர்மோனா டீ இண்டஸ்ட்ரீஸ் சார்பில், துடியலூர் அடுத்த வெள்ளகிணர் செல்லும் வழியில் “ப்ளூ ராபின் டீ லவுஞ்ச்” என்ற புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க நிகழ்ச்சியில், துடியலூர் நியூ லைஃப் சிட்டி சர்ச் ரெவரெண்ட் இம்மானுவேல் ஜேக்கப் பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, டர்மோனா டீ இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் தினேஷ் ராஜூ, சந்தியா தினேஷ் மற்றும் அபிநவ் தினேஷ் ஆகியோர் ரிப்பன் வெட்டி மையத்தை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் மேத்யூ, ராகுல் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர் இந்த புதிய மையத்தின் சிறப்பம்சமாக, 100 வகையான டீக்களை அனுபவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிளாக் டீ, கிரீன் டீ, ஐஸ் டீ, மாச்சா உள்ளிட்ட பல்வேறு வகையான டீக்களுடன், 40-க்கும் மேற்பட்ட தேயிலைத் தூள் வகைகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தேயிலைத் தூளில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலம், அந்த தேயிலை எங்கு, எப்போது பறிக்கப்பட்டது, பேக்கிங் செய்யப்பட்ட விதம் மற்றும் டெஸ்ட் முடிவுகள் உள்ளிட்ட முழுமையான தகவல்களையும் வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தரமான தேயிலைத் தூளை எவ்வாறு தேர்வு செய்வது, டீயை சரியான முறையில் தயாரிப்பது உள்ளிட்ட தகவல்களும் வாடிக்கையாளர்களுக்கு விளக்கப்படுகின்றன.
நீலகிரி குரும்பர் இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அவர்கள் இயற்கை முறையில் தயாரிக்கும் தேன் உள்ளிட்ட பொருட்களும் இந்த மையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
தேயிலையின் சுவை மட்டுமல்ல… அதன் பயணம், தரம், பாரம்பரியம் என அனைத்தையும் அறிந்துகொள்ளும் புதிய அனுபவமாக கோவையில் திறக்கப்பட்டுள்ளது டர்மோனாவின் ‘ப்ளூ ராபின் டீ லவுஞ்ச்’!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0