30-வது பொதுக்குழு கூட்டம்!

Sep 27, 2026 - 21:04
 0  4
30-வது பொதுக்குழு கூட்டம்!

கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

பாரம்பரியம் மிக்க கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் 30-வது பொதுக்குழுக் கூட்டம், ஆடிஸ் வீதியில் உள்ள மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மன்றத்தின் முன்னாள் தலைவர் காமராஜ், முன்னாள் செயலாளர் தங்கராஜ், முன்னாள் பொருளாளர் ரத்தன்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் செயலாளர் தங்கராஜ் மன்றத்தின் ஆண்டறிக்கையையும், முன்னாள் பொருளாளர் ரத்தன்குமார் வரவு-செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனர்.

பொதுக்குழுவில் 80-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி பாலமுருகன், 2026–2027-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக் குழுவை அறிவித்தார். தலைவர், செயலாளர், துணைத்தலைவர், இணைச்செயலாளர் உள்ளிட்ட 13 பதவிகளுக்கு போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய தலைவராக சுஜித், செயலாளராக சௌந்தர் மோகன், பொருளாளராக ரமேஷ் குமார், துணைத்தலைவர்களாக நிதின், ரவி, இணைச்செயலாளர்களாக ரமேஷ், கார்த்திக் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

செயற்குழு உறுப்பினர்களாக வைர பெருமாள், பாஸ்கர் பாண்டியன், தாமோதரன், பால்ராஜ், பிரசன்னா, ஜீவா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் புதிய செயலாளர் சௌந்தர் மோகன் நன்றியுரையாற்றினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0