ஒரு ஓட்டம் !பல குழந்தைகளின் வாழ்க்கைக்கு நம்பிக்கை!”

Sep 27, 2026 - 20:56
 0  2
ஒரு ஓட்டம் !பல குழந்தைகளின் வாழ்க்கைக்கு நம்பிக்கை!”
ஒரு ஓட்டம் !பல குழந்தைகளின் வாழ்க்கைக்கு நம்பிக்கை!”
ஒரு ஓட்டம் !பல குழந்தைகளின் வாழ்க்கைக்கு நம்பிக்கை!”

கோவை மாவட்டம் இருதய குறைபாடுகள் மற்றும் குழந்தைப் பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கில், கோவை ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை (GKNM) சார்பில் 4-வது ஆண்டாக ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

 பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மணி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி, அதே இடத்தில் நிறைவடைந்த மாரத்தான் போட்டியை கோவை மாநகர உதவி ஆணையர் கோகுல கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் மூத்த குடிமக்கள் பங்கேற்கும் வகையில் 1 மற்றும் 3 கி.மீ. ஓட்டப்பந்தயங்களும், 12 முதல் 18 வயதினர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான 5 கி.மீ. ஓட்டப்பந்தயமும், 18 முதல் 39 வயது மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான 10 கி.மீ. மாரத்தானும் நடைபெற்றன.

5 மற்றும் 10 கி.மீ. பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. கோவை மாவட்ட தடகள சங்கத்தின் அங்கீகாரத்துடன் நடைபெற்ற இப்போட்டிக்கு பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் ஆதரவு அளித்தன.

GKNM மருத்துவமனை முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுச்சாமி கூறுகையில், கடந்த ஆண்டு சுமார் 3,000 பேர் பங்கேற்றதாகவும், அதன் மூலம் கிடைத்த நிதியால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 42 குழந்தைகள் பயனடைந்ததாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டு 4,000-க்கும் மேற்பட்டோர் மாரத்தானில் பங்கேற்றதாகவும் அவர் கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0