கண்களைக் கட்டிக்கொண்டு 4 மணி நேரம் கீபோர்டு வாசித்த 11 வயது சிறுவன் – உலக சாதனை

Sep 27, 2026 - 09:00
 0  1
கண்களைக் கட்டிக்கொண்டு 4 மணி நேரம் கீபோர்டு வாசித்த 11 வயது சிறுவன் – உலக சாதனை
கண்களைக் கட்டிக்கொண்டு 4 மணி நேரம் கீபோர்டு வாசித்த 11 வயது சிறுவன் – உலக சாதனை

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் எஸ். சித்தார்த்தன், கண்களைக் கட்டிக்கொண்டு தொடர்ந்து 4 மணி நேரம் எலக்ட்ரிக்கல் கீபோர்டு வாசித்து உலக சாதனை படைத்துள்ளார்.

PMG மெட்ரிகுலேஷன் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வரும் சித்தார்த்தன், சிறு வயது முதலே இசையில் ஆர்வம் கொண்டவர். தொடர் பயிற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

சித்தார்த்தனின் சாதனையை International World Record Chronicles (IWRC) அங்கீகரித்து, 2026 செப்டம்பர் 25ஆம் தேதி உலக சாதனைச் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.

11 வயதிலேயே உலக சாதனை படைத்த சித்தார்த்தனின் முயற்சியும் திறமையும் பல இளம் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0