அர்ஜூன் பொறியியல் கல்லூரியில் 9-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா!

Sep 26, 2026 - 23:59
 0  5
அர்ஜூன் பொறியியல் கல்லூரியில் 9-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா!
அர்ஜூன் பொறியியல் கல்லூரியில் 9-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா!
அர்ஜூன் பொறியியல் கல்லூரியில் 9-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா!

கோவை அர்ஜூன் பொறியியல் கல்லூரியில் 9-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள அறிவுப்பூங்காவில் நடைபெற்றது. கல்லூரித் தலைவர் சூரிய நாராயணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வர் ஆண்டறிக்கை வழங்கினார்.

விழாவில் Tech Mahindra – Semiconductor BU, Global Delivery Head, பெங்களூரு, B. பாபுகண்ணன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு, தொழில்துறை வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தொழில்நுட்பத் திறன்களுடன் தொழில் முனைவோர் சிந்தனையையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து National Institute of Technology Nagaland இயக்குநர் டாக்டர் A. இளையபெருமாள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியே வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அடித்தளம் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும், உடல்நலத்தைப் பேணுவதுடன் பெற்றோரின் நலனிலும் அக்கறை செலுத்தவும் வலியுறுத்தினார்.

இதையடுத்து, கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து “ALUMNI MEET – RE-ACT 2026” நிகழ்ச்சி B. பாபுகண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர், இயந்திரவியல் துறைத்தலைவர் முனைவர் பிரபா, தமிழ்த்துறைப் பேராசிரியர் மு. சிவசக்தி உள்ளிட்ட பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0