பதக்க வேட்டையில் மாத்தர் தேய் பள்ளி !
கோவை பட்டணம் எல் & டி பைபாஸ் பகுதியில் இயங்கி வரும் மாத்தர் தேய் இண்டர்நேஷனல் பள்ளியின் 10-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, விளையாட்டுப் போட்டிகளில் தேசிய மற்றும் மண்டல அளவில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மறைமாவட்ட ஆயர் மேதகு மார் பால் ஆலப்பாட் அவர்களால் நிறுவப்பட்ட இப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு, பள்ளித் தாளாளர் அருட்தந்தை ஃபேபின் நீலங்காவில்,
உதவித் தாளாளர் அருட்தந்தை சச்சின் காலிங்கல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாதனை மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தனர்.
பள்ளி முதல்வர் கேரென் அகஸ்டின் பேசுகையில், கல்வியுடன் விளையாட்டு மற்றும் கலைத்துறைகளுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும்,
ஸ்கேட்டிங், கராத்தே, வில்வித்தை, கபடி, கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் சிறப்புப் பயிற்சியாளர்கள் மூலம் மாணவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
நான்காம் வகுப்பு மாணவர் ஃபெர்டினோ ஜோசப், 11 வயதுக்குட்பட்டோர் ஸ்கேட்டிங் போட்டியில் சிஐஎஸ்சிஇ மண்டல அளவில் ரோடு ரேஸில் தங்கப் பதக்கமும், 500 மீட்டர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்று, தேசியப் போட்டிக்குத் தேர்வானார்.
எட்டாம் வகுப்பு மாணவி அஞ்சனா, வட்டு எறிதல் போட்டியில் மண்டல அளவில் புதிய சாதனை படைத்ததுடன், தேசியப் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
கபடி போட்டியில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் செந்தூரன், தருண் ஆதீஷ் ஆகியோர் மண்டல அளவில் மூன்றாமிடம் பெற்று தேசியப் போட்டியில் பங்கேற்றனர். ஒன்பதாம் வகுப்பு மாணவர் பிரணேஷ், தேசிய அளவிலான கபடி போட்டியில் தனது அணியை வழிநடத்தி மூன்றாமிடத்தைப் பெற்றுத் தந்தார்.
சாதனை மாணவர்களின் வெற்றிக்குப் பங்களித்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0