சத்தியமங்கலத்தில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்!

Sep 22, 2026 - 14:05
 0  22
சத்தியமங்கலத்தில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்!
சத்தியமங்கலத்தில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்!
சத்தியமங்கலத்தில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்!

ஈரோடு மாவட்டம் /மாணவர்களின் பசியைப் போக்கி… கல்விக் கனவுகளுக்கு வலுசேர்க்கும் காலை உணவுத் திட்டம் !

சத்தியமங்கலத்தில் நகர்மன்றத் தலைவர் ஜானகி ராமசாமி தலைமையில் கோலாகல நிகழ்ச்சி!

சத்தியமங்கலம் மாணவர்களின் நலனைக் காக்கும் உன்னத நோக்கில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட நகராட்சி நடுநிலைப்பள்ளியில், நகர்மன்றத் தலைவர் ஜானகி ராமசாமி தலைமையில் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன் கலந்துகொண்டு, திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவை அன்புடன் பரிமாறியதுடன், அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.

மாணவர்களின் பசியைப் போக்கி, ஊட்டச்சத்துடன் கல்வி பயில்வதற்கு வழிவகுக்கும் இத்திட்டம், குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் கல்வி வளர்ச்சியையும் மேம்படுத்தும் மகத்தான மக்கள் நல முயற்சியாகத் திகழ்கிறது.

மாணவர்களுடன் இணைந்து உணவருந்தி, அவர்களது நலனில் அக்கறை செலுத்திய இந்நிகழ்வு, கல்வி மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சிறப்புமிக்க தருணமாக அமைந்தது.

இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் புன்னகையே நாளைய சமூகத்தின் வெற்றி! குழந்தைகளின் நலனையும் கல்வி வளர்ச்சியையும் முன்னிறுத்தும் காலை உணவுத் திட்ட விரிவாக்கம், சத்தியமங்கலம் நகராட்சியில் சிறப்பாகத் தொடங்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0