போதை வேண்டாம் விளையாட்டு போதும் SRV விழிப்புணர்வு மாரத்தான்!
கோவையில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற SRV தி வின்னிங் எட்ஜ் மாரத்தான் 2026!
விளையாட்டைத் தேர்ந்தெடுப்போம்... போதைப் பழக்கத்தைத் தவிர்ப்போம்!
இந்த விழிப்புணர்வு முழக்கத்துடன், கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது, “SRV தி வின்னிங் எட்ஜ் மாரத்தான் 2026”.
SRV தி வின்னிங் எட்ஜ் ஸ்போர்ட்ஸ் அண்ட் ஈவென்ட்ஸ் மேனேஜ்மென்ட் சென்டர் சார்பில், நிறுவனத் தலைவர் ரவீந்திரநாத் வர்மன் தலைமையில் இந்த மாரத்தான் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
3, 5 மற்றும் 10 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது ஓட்டத்திறனை வெளிப்படுத்தினர்.
விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதோடு, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
மாரத்தான் போட்டியின் தொடக்க விழாவில், கோவை ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் பொன்னுசாமி, கோவை மாவட்ட தடகள சங்க மருத்துவக் குழுத் தலைவர் டாக்டர் சுமன், தொழில்நுட்பச் செயலாளர் சீனிவாசன், மூத்த துணைத் தலைவர் ரமேஷ், எஸ்ஆர்வி செயலாளர் சதீஷ்ராவ், கிருத்திகா, இணை ஆணையர் வீரேசலிங்கம், வருமானவரித் துறை துணை ஆணையர் கோபிநாத், உதவி ஆணையர் அருண் பாபு, ஆல்வின் டேவிட், துணைத் தலைவர் சிவக்குமார் மற்றும் கஸ்தூரி திலகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குச் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்த மாரத்தான், உடல் ஆரோக்கியம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை வலியுறுத்தும் நிகழ்வாக அமைந்தது.
விளையாட்டின் மூலம் ஆரோக்கியமான சமுதாயம்... போதை இல்லா இளைய தலைமுறை!
இதுவே SRV தி வின்னிங் எட்ஜ் மாரத்தான் 2026-ன் முக்கிய நோக்கமாக அமைந்தது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0