7 அடுக்கு அதிநவீன தண்ணீர் தொட்டி அறிமுகம்! ஒரே மேடையில் அமைச்சர் பங்கேற்பும் நிர்வாகிகள் பதவியேற்பும்!
கோவை: தமிழ்நாடு மனைத் தொழில் செய்வோர் நலச்சங்கத்தின் கோவை வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் காவேரி நிறுவனத்தின் புதிய வட்டார் டேங்க் அறிமுக நிகழ்ச்சி, கோவை ரத்தினபுரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் ராக்கி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநிலச் செயல் தலைவர் டாக்டர் ஜி. முகமது ரபீக், மாநிலப் பொருளாளர் மயிலை செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொதுச் செயலாளர் ராம வெங்கடேசன் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், கோவை வடக்கு மாவட்டத்தின் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்திப் பேசினார். தொடர்ந்து, காவேரி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 7 அடுக்கு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஸ்டார்ஷிப் (Starship) ஆன்டி மைக்ரோபியல் அதிநவீன தண்ணீர் தொட்டியை அறிமுகம் செய்து வைத்தார். காவேரி குழுமங்களின் இணை நிர்வாக இயக்குநர் வினோத் சிங் ரத்தோர் உடனிருந்தார்.
இதில், கோவை வடக்கு மாவட்டத் தலைவராக கருப்புசாமி, மாவட்டச் செயலாளராக கோவை கதிர்வேல், மாவட்டப் பொருளாளராக ஆத்மா சம்பத், மாவட்ட அமைப்புச் செயலாளராக அழகப்பன் ஆகியோர் பொறுப்பேற்றனர். மேலும், துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களாகப் பலர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மனைத் தொழில் செய்வோரின் நலனைப் பாதுகாக்கும் வகையில் ரேரா மற்றும் மனை வரன்முறை தொடர்பான விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுதல், முறையான பத்திரப் பதிவுகள் மூலம் அரசின் வருவாயை அதிகரித்தல், அரசு மற்றும் தொழில் செய்வோருக்கு இடையே பாலமாகச் செயல்படுதல், அங்கீகரிக்கப்பட்ட மனைகளை மட்டுமே விற்பனை செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், நேர்மையான வணிகத்தை ஊக்குவித்தல், மரம் நடுதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக நலப் பணிகளில் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து ஈடுபடுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் மற்றும் சங்க ஆலோசகர்கள் ஏர்போர்ட் ராஜேந்திரன், விருகை கண்ணன், மெடிக்கல் நாராயணன், லயன் அருள்தாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0