20–40 வயதினருக்கு 61.4% உடல் பருமன்! கோவையில் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Sep 20, 2026 - 16:13
 0  7
20–40 வயதினருக்கு 61.4% உடல் பருமன்! கோவையில் அதிர்ச்சி ரிப்போர்ட்!
20–40 வயதினருக்கு 61.4% உடல் பருமன்! கோவையில் அதிர்ச்சி ரிப்போர்ட்!

கோவையில் 10 ஆண்டு ஆய்வில் அதிர்ச்சி தகவல்! உடல் பருமன், நீரிழிவு பாதிப்பு அதிகரிப்பு!

கோவை: கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் 2015 முதல் 2026 வரை மேற்கொள்ளப்பட்ட தொற்றா நோய்கள் குறித்த ஆய்வில், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பாதிப்புகள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

ஆய்வின்படி, உடல் பருமன் பாதிப்பு 43.1 சதவீதத்தில் இருந்து 57 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்களிடையே 63.3 சதவீதமாகவும், 20 முதல் 40 வயதினரிடையே 61.4 சதவீதமாகவும் உள்ளது. மேலும், ஆரம்பத்தில் ஆரோக்கியமாக இருந்தவர்களிடையேயும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

இதுகுறித்த ஆய்வு முடிவுகளைப் பகிர்ந்து கொள்ளும் மாநாடு, கோவை காளப்பட்டி டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் செப். 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டை கே.எம்.சி.ஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கே.எம்.சி.ஹெச் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி சிறப்புரையாற்றினார். கல்லீரல் நோய் மற்றும் எண்டோஸ்கோபி நிபுணர் டாக்டர் அருள்ராஜ் ராமகிருஷ்ணன் பங்கேற்று பேசினார். மாநாட்டில் இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி இளம் ஆய்வாளர் விருதும் வழங்கப்பட்டது.

நோய்கள் ஏற்படுவதற்கு முன்பே ஆபத்துக் காரணிகளைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0