விநாயகர் சதுர்த்தி விழாவில் பக்தி வெள்ளம்

Sep 16, 2026 - 15:32
 0  3
விநாயகர் சதுர்த்தி விழாவில் பக்தி வெள்ளம்
விநாயகர் சதுர்த்தி விழாவில் பக்தி வெள்ளம்
விநாயகர் சதுர்த்தி விழாவில் பக்தி வெள்ளம்
விநாயகர் சதுர்த்தி விழாவில் பக்தி வெள்ளம்
விநாயகர் சதுர்த்தி விழாவில் பக்தி வெள்ளம்

கோவை மாநகரில் சிவசேனா கட்சியின் சார்பில் 33-வது ஆண்டு கோவை மாநகர தலைமை விநாயகர் சதுர்த்தி விழா மநக வீதியில் பக்தி பெருக்குடனும் சிறப்புடனும் மாநில அமைப்பு செயலாளர் செந்தில் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் 2 -ம் நாளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டு வருகின்றனர்.

மேலும் காலை முதலே விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றது

தொடர்ந்து மாலை நேரத்தில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பு விருந்தினர்களாக சிவசேனா கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மா. முருகன் மற்றும் மாவட்டத் தலைவர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த விநாயகர் சதுர்த்தி விழா, பக்தர்களை ஒன்றிணைக்கும் ஆன்மிக நிகழ்வாகவும், பாரம்பரியத்தையும் பக்தியையும் எடுத்துரைக்கும் விழாவாகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

விழா நடைபெறும் பகுதிகளில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0