தீபாவளி ஷாப்பிங் பிரியர்களுக்கு செம ஆஃபர் கோ-ஆப்டெக்ஸில் 30% தள்ளுபடி

Sep 15, 2026 - 19:08
 0  13
தீபாவளி ஷாப்பிங் பிரியர்களுக்கு செம ஆஃபர் கோ-ஆப்டெக்ஸில் 30% தள்ளுபடி
தீபாவளி ஷாப்பிங் பிரியர்களுக்கு செம ஆஃபர் கோ-ஆப்டெக்ஸில் 30% தள்ளுபடி

கோவை, செப். 16:

கோவை மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2026 சிறப்பு விற்பனை நேற்று தொடங்கியது. இதையொட்டி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத அரசு சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

விற்பனை தொடக்க விழாவுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமை வகித்தார். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் குத்துவிளக்கேற்றி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.

கோ-ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர் விஜயலட்சுமி முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார். விழாவில் முதுநிலை மண்டல மேலாளர் அம்சவேணி, துணை மண்டல மேலாளர் லட்சுமிபிரபா, மருதம் விற்பனை நிலைய மேலாளர் செல்வதுரை மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செப்டம்பர் 15 முதல் கோவை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களுக்கான கடன் விற்பனை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கோவையில் உள்ள ஸ்ரீபாலமுருகன், சாய்பாபா காலனி மற்றும் மருதம் விற்பனை நிலையங்களில் ‘பழசுக்கு புதுசு’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பழைய, கிழிந்த நிலையில் உள்ள அசல் ஜரிகை கொண்ட பட்டுப் புடவைகளை வழங்கி, புதிய பட்டுப் புடவைகளை பெற்றுக்கொள்ளலாம்.

தீபாவளி விற்பனைக்காக புதிய ரக சட்டைகள், குர்த்தீஸ், காட்டன் மற்றும் பட்டு சேலைகள், சிறுமிகளுக்கான பட்டு பாவாடை சட்டைகள், நைட்டிகள், ஸ்லிம் ஃபிட் சட்டைகள், லினன் ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

மேலும், பொதுமக்களின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு தீபாவளி 2026-க்கான விற்பனை இலக்காக ரூ.5.65 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0