2 டன் மலர்… 50 கிலோ சந்தனம்! 👑 ராஜா அலங்காரத்தில் ஜொலித்த புலியகுளம் முந்தி விநாயகர்!

Sep 14, 2026 - 16:38
 0  4

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி விழா

கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு முந்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்து வழிபட்டனர்.

விழாவையொட்டி அதிகாலை 2 மணிக்கு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு முந்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முந்தி விநாயகர் சிறப்பு ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த அலங்காரத்திற்காக சுமார் 2 டன் மலர்கள், 50 கிலோ சந்தனம் மற்றும் 16 வகையான வாசனை திரவியங்கள் பயன்படுத்தப்பட்டன. வண்ணமயமான மலர் அலங்காரத்தில் ராஜா அலங்காரத்தில் காட்சியளித்த முந்தி விநாயகரை ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் தரிசனம் செய்தனர்.

கோவில் செயல் அலுவலர் செ. கனகராஜ், தக்கர் கே. பவாணி ஆகியோர் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

விழாவில் ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு முந்தி விநாயகரை தரிசனம் செய்தனர்.

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற விழாவிலும் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். அதிகாலை முதலே கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0