300+ யூஸ்டு கார்கள்… ஒரே இடம்! கோவையில் செப்.17 முதல் அதிரடி கார் மேளா!

Sep 13, 2026 - 11:39
 0  2
300+ யூஸ்டு கார்கள்… ஒரே இடம்! கோவையில் செப்.17 முதல் அதிரடி கார் மேளா!
300+ யூஸ்டு கார்கள்… ஒரே இடம்! கோவையில் செப்.17 முதல் அதிரடி கார் மேளா!

கோயமுத்தூர் மாவட்ட கார் டிரேடர்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில், 11-வது எடிஷன் மெகா யூஸ்டு கார் விற்பனை மேளா, கோவை திருச்சி சாலையில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் செப்டம்பர் 17 முதல் 22-ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்தக் கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. சிறிய ரக கார்கள் முதல் உயர்தர கார்கள் வரை பல்வேறு வகையான கார்கள் இடம்பெறுவதுடன், ரூ.50 ஆயிரம் முதல் பயன்படுத்தப்பட்ட கார்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் தங்களது பட்ஜெட்டிற்கு ஏற்ற கார்களை நேரடியாக பார்வையிட்டு, பல்வேறு கார்களை ஒப்பிட்டு தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பழைய கார்களை விற்பனை செய்ய விரும்புவோருக்காக பழைய காரை மாற்றிக் கொள்ளும் வசதி மற்றும் ‘பார்க் அண்ட் செல்’ வசதியும் வழங்கப்படுகிறது. வாகனங்களின் நம்பகத்தன்மை, ஆவணங்கள் சரிபார்ப்பு, வங்கி கடன் மற்றும் ஆவணப் பணிகளுக்கான உதவிகளும் வழங்கப்பட உள்ளன.

குறிப்பாக, தமிழகம் முழுவதும் இலவசமாக உரிமையாளர் பெயர் மாற்றம் செய்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்பட்ட காரை வாங்க அல்லது பழைய காரை விற்பனை செய்ய விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 70929 20021 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0