9-ம் வகுப்பு மாணவனின் யோசனையில் உருவான ‘ஹிட் லேர்ன்’ ஏஐ செயலி! ம
கோவை:
9-ம் வகுப்பு மாணவனின் கற்றல் சிரமத்திலிருந்து உருவான ‘ஹிட் லேர்ன்’ என்ற ஏஐ கற்றல் செயலி கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஹரிஹரன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மீது கொண்ட ஆர்வத்தால் கோடிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை கற்றுள்ளார்.
அப்போது, படிக்கும் நேரத்தில் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக விளக்கம் பெற முடியாத சிக்கலை எதிர்கொண்டதாகவும், சந்தேகம் எழும் நேரத்திலேயே குரல் மூலம் கேட்டு விளக்கம் பெறக்கூடிய ஏஐ இருந்தால் எப்படி இருக்கும்? என்ற சிந்தனை ஏற்பட்டதாகவும் ஹரிஹரன் தெரிவித்தார்.
இந்த சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு, கோவையில் உள்ள ஹோம் ஐடியாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து, ‘ஹிட் லேர்ன்’ செயலியை உருவாக்கியுள்ளார்.
இந்த செயலியில் மாணவர்கள் தங்களது வகுப்பைத் தேர்வு செய்து கற்றல் வீடியோக்களைப் பார்க்கலாம். பாடம் தொடர்பான சந்தேகங்களை குரல் மூலம் கேட்டு, ஏஐ உதவியுடன் உடனடியாக விளக்கம் பெறலாம்.
மேலும், மாணவர்களின் கற்றலை சோதிக்கும் வகையில் வினாடி வினா, புதிர்கள், வாய்ஸ்-டு-வாய்ஸ் கேள்வி–பதில், பல்மொழி ஆதரவு, ஏஐ அடிப்படையிலான கற்றல் மற்றும் ஊடாடும் மதிப்பீடுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்கும் வசதியும் கொண்ட இந்த செயலி, மாணவர்களின் கற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் கருவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0