அர்ஜூன் பொறியியல் கல்லூரியில் ‘ASCEND 2026’ தொடக்கம்!

Sep 9, 2026 - 20:08
 0  17
அர்ஜூன் பொறியியல் கல்லூரியில் ‘ASCEND 2026’ தொடக்கம்!
அர்ஜூன் பொறியியல் கல்லூரியில் ‘ASCEND 2026’ தொடக்கம்!

கோவை அர்ஜூன் பொறியியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு B.E. மற்றும் B.Tech. மாணவர்களுக்கான ‘ASCEND 2026’ தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில், குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வும், இரண்டாம் ஆண்டு AIDS மாணவி செல்வி வனிதாவின் சிறப்பு நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் நா. ஜானகி மனோகர் வரவேற்புரையாற்றினார்.

கல்லூரித் தலைவர்  சூரியநாராயண், அறங்காவலர் ராஜா, செயலாளர் முனைவர் ரா.சுரேஷ்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக, வழக்கறிஞரும் பட்டிமன்ற நடுவரும், ஊக்கமளிக்கும் பேச்சாளரும், Sigaram Foundation நிறுவனத் தலைவருமான முனைவர் S. D. கலையமுதன் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

அப்போது, கல்வியுடன் தன்னம்பிக்கை, ஒழுக்கம், திறன், படைப்பாற்றல் மற்றும் தொடர் முயற்சியையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முனைவர் மு. ராகவேந்தர் நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.

முதலாம் ஆண்டு மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு உற்சாகமான தொடக்கமாக ‘ASCEND 2026’ நிகழ்ச்சி அமைந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0