“சிவன் விஷ்ணு பிரம்மா ஒரே திருத்தலத்தில் தரிசனம்!

Sep 9, 2026 - 00:02
 0  12
“சிவன் விஷ்ணு பிரம்மா ஒரே திருத்தலத்தில் தரிசனம்!

கோவை பூமார்க்கெட்டில் ஆன்மிக அதிர்வலை 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த,கொங்கு கொடுமுடி’ என போற்றப்படும் அருள்மிகு மங்களாம்பிகை உடனமர்ஹரி ஓம் தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயிலில்,புணராவர்த்தன மகா கும்பாபிஷேக பெருவிழாவெகு விமரிசையாக நடைபெற்றது!

சிவன்… விஷ்ணு… பிரம்மா…

என மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும்

இந்த புனித திருத்தலத்தில்,

பிரம்மாண்ட பத்மாசன தியான கோலத்தில் அமைக்கப்பட்ட

சிலைக்கான பிரதிஷ்டாபிஷேகமும்

சிறப்பாக நடைபெற்றது.

முற்கால தர்மகர்த்தாக்களான

அமரர் சிவதிரு. மாதவன் சுவாமிகள்

மற்றும் அமரர் சிவதிரு. பாலசுப்பிரமணியம்

ஆகியோரின் நல்லாசியுடனும், குருவருளுடனும்

இந்த மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

திருக்கோயில் நிர்வாகக்குழுத் தலைவர் குணசேகரன்,

சந்திரன், சித்ரா அம்மையார் மற்றும்

சர்வசாதகர் அர்ச்சகர் சிவஸ்ரீ பிரவீன்குமார் சுவாமிகள்

ஆகியோரின் ஏற்பாட்டில் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் கோவை பொறுப்பு அமைச்சருமான சம்பத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,மும்மூர்த்திகளை தரிசித்து அருள் பெற்றார்.

ஆலய கட்டிடப் பணிகள் மற்றும்சிலை வடிவமைப்பை மேற்கொண்ட சரவணா சிற்பக் கலைக்கூடம் சூப்பர் சுப்பிரமணியம் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர்.

மேலும், விழாக்குழுவினரான மணிகண்டன், காளிதாஸ்,

சைஜூ, ரத்தீஸ், பிரவீன்குமார் என்கிற பாலாஜி மற்றும்

பாச உள்ளம் சமூக நல மக்கள் அமைப்பின் நிறுவனர்

கோவை கோகுல் ஆகியோர் உடனிருந்தனர்.

கும்பாபிஷேக பணிகளுக்கு பொருளுதவி,நிதியுதவி, அன்னதான உதவி மற்றும் உடல் உழைப்பு வழங்கிய அனைவருக்கும் திருக்கோயில் நிர்வாகம்

சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.

விழாவில் பொதுமக்கள், பக்தர்கள், பிரமுகர்கள்

மற்றும் வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டு,

தர்மலிங்கேஸ்வரர், மங்களாம்பிகை மற்றும்

மும்மூர்த்தி சுவாமிகளை தரிசித்து

பரிபூரண அருள் பெற்றனர்.

மேலும், திங்கட்கிழமை முதல்

48 நாள் மண்டல பூஜைகள் நடைபெற உள்ளன.

அனைத்து பக்தர்களும் தவறாமல் கலந்து கொண்டு

சிவபெருமானின் அருளைப் பெறுமாறு

கோயில் நிர்வாகம் சார்பில் அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமும் மாலை 7 மணியளவில்

பக்தர்கள் மற்றும் குழந்தைகளுக்கு திருஷ்டி கழித்து,

மந்திரித்து கயிறு கட்டும் சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது.

விழாவின் சிறப்பம்சமாக,

மலர் விற்பனையாளர்கள், பக்தர்கள் மற்றும்

கோயில் நிர்வாகம் சார்பில்

தனித்துவமான முறையில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

கோவை பூமார்க்கெட்டில் ஆன்மிக அதிர்வலை ஏற்படுத்திய

இந்த தர்மலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா,

பக்தர்களிடையே பெரும் ஆன்மிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0