ஸ்ரீ கல்கி பகவான் மகா சமாதி தினம்.!
கோவை ஶ்ரீ கல்கி பகவான் மகா சமாதி அடைந்ததை முன்னிட்டு, அவரது தவப்புதல்வர் முக்தி குரு ஶ்ரீ கிருஷ்ணா ஜி அவர்களின் அறிவுரைப்படியும், பகவானின் சீடர் யோகநாதன் தாசாஜி வழிகாட்டுதலின்படியும், தமிழகம் முழுவதும் அன்னதான தர்மப்பணி சிறப்பாக நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மாநகர மாவட்டத்தின் தெற்குப் பகுதிகளான தெலுங்கு வீதி, பெரிய கடை வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி, ராஜ வீதி, செட்டி வீதி, பேரூர் பச்சாபாளையம், சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஶ்ரீ கல்கி பகவான் மற்றும் அம்மா பகவான் பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை வார வழிபாட்டை முன்னிட்டு நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்வில், 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பகவானின் மகா சமாதியை நினைவுகூரும் வகையில், பசிப்பிணி போக்கும் தர்மப்பணியாக இந்த நிகழ்வு பக்தியுடன் முன்னெடுக்கப்பட்டது.
இந்த அன்னதானப் பணிக்கு திருமதி ராணி செல்வம், ஶ்ரீ கல்கி ஜுவல்லரி ஷாம் நடராஜன், பிரியா, இன்பலதா, உஷா, சந்தியா, கலையரசி, ஷாலு உள்ளிட்டோர் தலைமை தாங்கி நடத்தினர்.
மேலும், சியாமளா, பவன், கனகலதா, சக்தி வினித், குமணன்,ஷோபா,, சாந்தகுமாரி, லக்ஷித், உமா, கார்த்திக், சங்கீதா, காயத்திரி, கிருஷ்ணன், நாகலட்சுமி, வேதாந்த் கிருஷ்ணா, திரிமான் கிருஷ்ணா, கோபால், அனுசியா, ஷீலா, ஶ்ரீவள்ளி, ஈஸ்வரி, சத்யா, சித்ரா, ஹர்சிதா, கீதா, விஜயகுமார், மகேஸ்வரி, பிரசன்னா, தனலட்சுமி, வெங்கடேஷ், பிரபாகரன், பவித்ரா, குமரேசன், சாந்தி, பிரகாஷ், தமிழரசு, வனஜா, மணி, கல்யாணி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்து அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்வில் பாச உள்ளம் சமூக நல மக்கள் அமைப்பின் நிறுவனர் கோவை கோகுலும் உடனிருந்தார்.
ஶ்ரீ கல்கி அவதாரம் அம்மா பகவான் ஆலயத்திற்கு வருகை தந்து மனமுருகி வழிபடுவோருக்கு மனநிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையைப் பக்தர்கள் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6 மணிக்கு நடைபெறும் வார வழிபாட்டில் பங்கேற்று, தங்களது குறைகளை இறைவனிடம் தெரிவித்து வழிபடுமாறு பொதுமக்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்தனர்.
இந்த அன்னதான தர்மப்பணிக்கு பல ஆண்டுகளாகப் பொருளுதவி மற்றும் நிதியுதவி வழங்கி வரும் அனைவருக்கும் ஆலயத்தின் சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0