தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர் அசோசியேஷன் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா

Oct 11, 2026 - 17:58
 0  6
தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர் அசோசியேஷன் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா

கோவை தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர் அசோசியேசன் கோவை மாவட்டம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் D.மணிமாறன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா துடியலூர் தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது.இதில் தமிழக அரசுக்கு கோரிக்கையாக ஜிஎஸ்டி- யில் சலுகை வேண்டுமென்று கடந்த ஆட்சியாளர்களிடம் மனு கொடுத்ததாகவும் அதே போல் தற்பொழுது உள்ள அரசிடம் கோரிக்கை மனு தருவதாகவும் அதனை நிறைவேற்றி தரகேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

இதில் கோவை மாவட்ட தலைவர் தங்கவேல்,மாவட்ட செயலாளர் நந்தகோபால்,மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், வடக்கு பகுதி தலைவர் ரமேஷ்,பொருளாளர் மணி,பொள்ளாச்சி தாலுகா தலைவர் கணேஷ், காரமடை தாலுகா தலைவர் சி வி துரைசாமி,கிணத்துக்கடை தாலுகா தலைவர் கனகராஜ், கிழக்கு பகுதி சூலூர் சசி,மத்திய பகுதி கருணாகரன்,மேற்கு பகுதி தலைவர் மணிஷ்,தெற்கு பகுதி தலைவர் ராமகிருஷ்ணன்,மற்றும் பகுதி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் தாலுகா நிர்வாகிகள்,மற்றும் உறுப்பினர்கள் 1000-கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0