இதயத் துடிப்பு நின்றாலும் உயிரைக் காக்கலாம்! கோவையில் மருத்துவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி!
கோவை ராயல் கேர் உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் இந்திய அவசர மருத்துவச் சங்கம் இணைந்து நடத்திய இதய அவசர சிகிச்சைப் பயிலரங்கம் மற்றும் தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி, ராயல் ஃபோரம் அரங்கில் நடைபெற்றது.
ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் க. மாதேஸ்வரன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தார். இந்திய அவசர மருத்துவச் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஸ்ரீநாத் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இதய அவசர நிலைகளை விரைவாகக் கண்டறிந்து, தாமதமின்றி உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிரிழப்புகளைக் குறைக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பயிலரங்கில் மாரடைப்பு, இதயத் துடிப்பு சீரற்ற நிலை, இதயத் தடுப்பு, இளம் வயதினருக்கு ஏற்படும் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் அவசர பாதிப்புகள் மற்றும் நுரையீரல் ரத்தக் குழாயில் அடைப்பு உள்ளிட்ட பாதிப்புகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், இதயத் தடுப்பு ஏற்படும் நேரத்தில் வழங்க வேண்டிய முதலுதவி மற்றும் உயிரைக் காக்க மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராயல் கேர் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் கண்ணன் தங்கவேலு, திவ்யா, கமலகண்ணன், ராஜ் விஷ்ணு, அகிலன், இளவரசன் ஆகியோர் செய்திருந்தனர். மருத்துவ இயக்குநர் டாக்டர் பி. பரந்தாமன், தலைமைச் செயல்பாட்டு அலுவலர் டாக்டர் கே.டி. மணிசெந்தில்குமார் மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு மூத்த பொது மேலாளர் எம். வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0