விவசாய கண்காட்சி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார்!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மூன்று நாட்கள் நடைபெறும் மாபெரும் விவசாயிகள் கண்காட்சியை அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாநில விவசாயப் பிரிவு தலைவர் ஜி.கே.நாகராஜ், பாஜக கோவை மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் மற்றும் இராஜலட்சுமி திருமண மண்டப உரிமையாளர் பி.நடராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரங்குகளைப் பார்வையிட்டார். குறிப்பாக, விவசாயத்திற்குப் பயன்படும் நவீன இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு, அவற்றின் செயல்முறைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து வல்லுநர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, கண்காட்சியில் இடம்பெற்றிருந்த இயற்கை விவசாயப் பொருட்களான தேன், குல்கந்து உள்ளிட்ட பாரம்பரிய உணவுப் பொருட்களைச் சுவைத்து மகிழ்ந்தார். இக்கண்காட்சியில் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கவும், புதிய விவசாய தொழில்நுட்பங்களை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடனும் தொடங்கப்பட்டுள்ள இக்கண்காட்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ளது
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0