வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவில் பிரதோஷ விழா
கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் புரட்டாசி மாத பிரதோசம் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் பெரிய நந்தி மற்றும் சிவ பெருமானுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று, அருள்தரும் விஸ்வநாயகி அம்பிகை உடனமர் அருள்மிகு விருந்தீஸ்வரர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்த்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சுமார் 1000 வருடங்களுக்கு மேல் பழமையான கோவை துடியலூரை அடுத்துள்ள வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முதலில் பெரிய நந்திக்கும் பின்னர் சிவனுக்கு சிறப்பு அபிசேக பூஜைகள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் நந்திக்கு நெய், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், திருநீர், சில்லரை நாணயங்கள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிசேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து விருந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து அருள்தரும் விஸ்வநாயகி அம்பிகை உடனமர் அருள்மிகு விருந்தீஸ்வரர் சுவாமி திருவீதி உலா கோவிலை சுற்றி நடைபெற்றது. இதில் இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் வடமதுரை, துடியலூர், பன்னீர்மடை, பழனிகவுண்டன்புதூர், பூச்சியூர், தொப்பம்பட்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து திரளான பக்த்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவிற்கு அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பி.வி.மணி தலைமை வகித்தார். முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அம்சவேணி பழனிச்சாமி, சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தயாநிதி குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்கள் இறைவனுக்கு அபிசேக, அலங்கார பூஜைகளை செய்தனர். இதில் சரவணம்பட்டி சரவணா டிம்பர்ஸ் சிவலிங்க மூர்த்தி சங்கீதா குடும்பத்தினர் பிரதோச பூஜைகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வடமதுரை விருந்தீஷ்வரர் கோவில் சிவவாத்திய குழுவினர் சிவவாத்தியம் இசைத்தனர்.
தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சேகர், வேலுச்சாமி, ஏ வி எம் வேல்முருகன், வெள்ளக்கிணர் செல்வகுமார், பன்னீர்மடை ரவிச்சந்திரன், தணிகைசெல்வன், மோகன சுந்தரம், விஜயகுமார், பாபு, காளிதாஸ், ஜெயபால், ராஜ்கண்ணன், சுரேஷ், சண்முகசுந்தரம், மனோகரன், விஜயகுமார், ஆடிட்டர் கிரன் ஸ்ரீ, கண்ணன் உட்பட பலர் செய்திருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0