முதியோர் நலனுக்காக ‘அபயம்’ 24×7 உதவி சேவை தொடக்கம்!

Sep 7, 2026 - 13:37
 0  2
முதியோர் நலனுக்காக ‘அபயம்’ 24×7 உதவி சேவை தொடக்கம்!
முதியோர் நலனுக்காக ‘அபயம்’ 24×7 உதவி சேவை தொடக்கம்!

கோவை: முதியோரின் மருத்துவத் தேவைகள் மற்றும் அவசரகால உதவிகளை ஒருங்கிணைக்கும் வகையில், கோவையைச் சேர்ந்த புவன தர்மம் அறக்கட்டளை சார்பில் ‘அபயம்’ என்ற முதியோர் நல உதவி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மூத்த இதயநோய் சிகிச்சை நிபுணரும், பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநருமான டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன் தலைமையில் செயல்படும் புவன தர்மம் அறக்கட்டளை, கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. கலாசாரம், கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அறக்கட்டளை பணியாற்றி வருகிறது.

‘அபயம்’ சேவையின் மூலம் முதியோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் மருத்துவ உதவிகளைப் பெற முடியும். புறநோயாளர் சிகிச்சை, உள்நோயாளர் சிகிச்சை மற்றும் அவசர மருத்துவ உதவிகளை ஒருங்கிணைக்க 95146 92026 என்ற பிரத்யேக தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ‘அபயம்’ மூலம் வழங்கப்படும் மருத்துவ வழிகாட்டுதல் மற்றும் மருத்துவமனை தன்னார்வலர் ஒருங்கிணைப்பு சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

இந்த சேவையை பத்மஸ்ரீ டாக்டர் ஆர்.வி. ரமணி, சங்கரா கண் அறக்கட்டளை தலைவர், தொடங்கி வைத்தார். சக்தி மசாலா நிறுவனர் பி.சி. துரைசாமி, இயக்குநர் சாந்தி துரைசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முதியோருக்கான முழுமையான ஆதரவு அமைப்பை உருவாக்கும் நோக்கில், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் பிரயோஜனா நிறுவனத்துடன் ‘அபயம்’ இணைந்து செயல்படுகிறது.

‘அபயம்’ அமைப்பு மருத்துவ வழிகாட்டுதல், இதயநோய் ஆலோசனை மற்றும் மருத்துவமனை வருகை ஒருங்கிணைப்பு உள்ளிட்ட சேவைகளை வழங்கும். பிரயோஜனா நிறுவனம் சார்பில் வீட்டிலேயே முதியோருக்கான தேவைகள், போக்குவரத்து, பொழுதுபோக்கு மற்றும் துணை சேவைகள் வழங்கப்பட உள்ளன.

விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 14, 2026 முதல் ‘அபயம்’ சேவை முழுமையாக செயல்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘அபயம்’ மொபைல் செயலி மற்றும் இணையதளம் உருவாக்கப்பட்டு வருவதுடன், அவை விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது என்பது குறிப்பிடதக்கது

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0