கோவை தடகள அணியின் வெற்றிக் கொடி! 30 பதக்கங்களுடன் மாஸ் சாதனை!
கோவை தடகளப் போட்டிகளில் கோவை மாவட்டத்தின் வெற்றிப் பயணம் தொடர்ந்து நீடித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள NPR கல்லூரியில் நடைபெற்ற 40-வது ஜூனியர் தடகளப் போட்டியில், கோவை மாவட்ட தடகள அணி ஒட்டுமொத்தமாக 2-ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
கோவை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி, 14 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களை வென்று கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
குறிப்பாக, தொடர்ந்து 6-வது முறையாக கோவை மாவட்ட அணி ஒட்டுமொத்த அளவில் 2-ம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.
மாணவர் மற்றும் மாணவியர் பிரிவுகளில் கோவை அணி தலா 2-ம் இடத்தைப் பிடித்தது. வயது பிரிவுகளில் U14 மாணவர்கள், U16 மாணவர்கள் மற்றும் U18 மாணவியர் பிரிவுகளில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். மேலும், U14 மாணவியர், U18 மாணவர்கள் மற்றும் U20 மாணவியர் பிரிவுகளில் 2-ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இந்த வெற்றியைப் பாராட்டும் வகையில், கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில், கோவை மாவட்ட தடகள சங்கத் தலைவரும், தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத் தலைவருமான டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின், எம்.எல்.ஏ., வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.50,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தடகள சங்க செயலாளர் சம்சுதீன், பொருளாளர் முனைவர் ஜான் சிங்கராயர், தொழில்நுட்பத் தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் சரவண காந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, பயிற்சாளர்கள் நந்தகுமார், ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், Rotary Club of Akkuruthi சார்பில் தலைவர் தேன்மொழி, செயலாளர் மஞ்சுளா ஜோசப், குழு உறுப்பினர் மீனா ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்று, வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளைப் பாராட்டினர்.
கோவை மாவட்ட தடகள அணியின் இந்த வெற்றி, வீரர், வீராங்கனைகளின் கடின உழைப்பு, பயிற்சியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நிர்வாகிகளின் தொடர் ஊக்கத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0