பேரூர் தமிழ் கல்லூரியில் முப்பெரும் விழா

Oct 6, 2026 - 23:16
 0  3
பேரூர் தமிழ் கல்லூரியில் முப்பெரும் விழா

கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் உள்ள தமிழ் கல்லூரியில், கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் 12 ஆம் ஆண்டுவிழா, தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர் நல சங்கத்தின் கோவை மாவட்ட நான்காம் ஆண்டு விழா, நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் 159 ஆவது பிறந்தநாள் விழா, பத்மஸ்ரீ சுந்தராம்பாள் 118 வது பிறந்தநாள் விழா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 99 வது பிறந்தநாள் விழா, என முப்பெரும் விழாவாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் நிறுவன தலைவர் அஜ்மீர் சாகுல் தலைமை தாங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார், கலந்து கொண்டு நாடகக் கலைஞர்களின் திறன், மற்றும் திறமைகளை கண்டு வெகுவாக பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் நிறுவன தலைவர் அஜ்மீர் சாகுல் கூறியதாவது...

கோவையில் நடைபெறு வரும் இந்த முப்பெரும் விழாவில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து கலைஞர்கள் இங்கு வந்துள்ளனர். இந்த விழா ஆண்டு தோறும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடைபெறுவது வழக்கம், இந்த கூட்டத்தில் தமிழக அரசு அங்கீகரித்த 110 கலையை சார்ந்த கலைஞர்களை வரவழைத்த அவர்களின் கலைத்திறனை பாராட்டி சிறப்பு செய்து வருவதாக கூறினார். நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் வகையில் நமது சங்கத்தின் சார்பாக கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் சிறப்பு விருதுகளும் வழங்கபட்டு வருகின்றது என்று கூறினார். இதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட நாடக நடிகர்கள் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் கூறியதாவது.

தமிழக அரசு இந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் 3000 ரூபாயில் இருந்து 5000 வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம் ஆனால் இதுவரை அரசு செவிசாய்க்கவில்லை, அரசு இதனை நிறைவேற்றி தர வேண்டும், இந்த கலைஞர்களுக்கு அடையாளஅட்டைகள் வழங்க வேண்டும், அரசு பேருந்தில் செல்ல 50 விழுக்காடு கட்டணத்தை அரசு வழங்கியுள்ளது இதனை, முழுமையாக தள்ளுபடி செய்து இந்த கலைஞர்களுக்கு இலவச பயண திட்டத்தை அரசு வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்க மாநில தலைவர் தங்கவேலு, வேலுர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சிவக்குமார், நாநில பொருளாளர் கொடுமுடு அன்னை பாலன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0